Published Date: April 2, 2023
CATEGORY: GENERAL
நெல்லை டவுன் ஈசான விநாயகர் கோவில் முன்பு தி.மு.க அரசின் சாதனை விளக்கும் துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று இரவு நடந்தது. தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு திமுக அரசின் சாதனைகள் அச்சடிக்கப்பட்ட துண்டு பிரசுரங்களை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சிக்கு நெல்லை மாநகர தி.மு.க. செயலாளர் சு.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். இதில் நெல்லை மத்திய மாவட்ட செயலாளர் அப்துல் வகாப், எம். எல். ஏ., மேயர் பி.எம். சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜீ, பகுதி செயலாளர் தச்சை சுப்பிரமணியன், மானூர் ஒன்றிய செயலாளர் அன்பழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் ஈசான விநாயகர் கோவிலில் தரிசனம் செய்தார். அவருக்கு அங்கு பூரண கும்பம் மரியாதை அளிக்கப்பட்டது.
Media: Daily thanthi nellai edition